Home உலகம் இந்தியா-அமெரிக்கா உறவு பற்றி சீனா விமர்சனம் – ஒபாமா பதிலடி!

இந்தியா-அமெரிக்கா உறவு பற்றி சீனா விமர்சனம் – ஒபாமா பதிலடி!

656
0
SHARE
Ad

China_10வாஷிங்டன், பிப்ரவரி 5 – இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டது பற்றியும், மோடியுடன் அவர் காட்டிய நெருக்கம் பற்றியும் சீன அரசும், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்களும் பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா நல்லுறவை குறித்து சீனாவின் பயன் தேவையற்ற ஒன்று என்று ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஒபாமா கூறியிருப்பதாவது:-

“எங்கள் மக்களின் வளத்தை மேம்படுத்துவதே, எங்களின் முழு நோக்கமாக உள்ளது. அதன் காரணமாக நாங்கள் இரு நாடுகளும் எங்கள் நல்லுறவை பேண விரும்புகிறோம்”.

#TamilSchoolmychoice

“எங்கள் இரு நாடுகளின் நல்லுறவு, எங்களை வளப்படுத்துவதற்காகத் தானே தவிர, மற்ற நாடுகளின் இழப்பிற்காக நாங்கள் இதனை செய்யவில்லை”.

“இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் நடத்திய ஆலோசனையின் நோக்கமும் இதுவாகவே இருந்தது. ஒருமைப்பாடற்ற சீனா எங்களுக்கு ஆபத்தானதாக தோன்றுகிறது”.

“கடல் எல்லை சார்ந்த பிரச்சனைகளில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளை சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. மாறாக, அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை அமைதியான வழியில் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்”.

“இந்தியாவுடன் நாங்கள் நெருக்கமாக இருப்பதற்கு தேவையான அம்சங்கள் இந்தியாவிடம் உள்ளன. எனவே, இந்தியா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நாட்டம் உள்ளது. அமெரிக்க மக்களிடத்திலும் இதே உணர்வு உள்ளது”.

“இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவையே வைத்திருப்பதால், அது குறித்து சீனா பயப்பட தேவையில்லை” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.