Home நாடு தலைமைத்துவ பதவிக்குப் போட்டியிடுவேன் – சரவணன்

தலைமைத்துவ பதவிக்குப் போட்டியிடுவேன் – சரவணன்

653
0
SHARE
Ad

Saravananகோலாலம்பூர், பிப்ரவரி 4 – எதிர்வரும் ஜூன் மாதம் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடக்கும் என்றால், தான் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும் என்று அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியில் தற்போது தனக்கு ஆதரவாக 1500 கிளைத் தலைவர்கள் உள்ளனர் என்றும், இன்னும் 500 கிளைத் தலைவர்கள் ஆதரவு தருவார்கள் என்றால் தான் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும் என்று தெரிவித்தார்.

“எல்லாம் ஆதரவாளர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் நான் தலைமைப் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். நான் போட்டியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்  மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என, தான் பரிந்துரைக்கப் போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.