Home இந்தியா அண்ணா நினைவு தினம்: ஜெயலலிதா, கருணாநிதி உட்பட அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

அண்ணா நினைவு தினம்: ஜெயலலிதா, கருணாநிதி உட்பட அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

868
0
SHARE
Ad

Untitledசென்னை, பிப்ரவரி 4 – தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Eveningஅதிமுக பொதுச் செயலாளரும், முன்னால் முதல்வருமான ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 46–வது நினைவு தினத்தையொட்டி, அவரது சமாதியில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

#TamilSchoolmychoice

Tamil-Daily-News-Paper_83173334599அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா சமாதிக்கு அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.