Home தொழில் நுட்பம் இனி பல்வேறு கோணங்களில் யூ-டியூப் காணொளிகளைக் காணலாம்! 

இனி பல்வேறு கோணங்களில் யூ-டியூப் காணொளிகளைக் காணலாம்! 

654
0
SHARE
Ad

YouTube-580-75கோலாலம்பூர், பிப்ரவரி  5 – இதுவரை ‘யூ-டியூப்’ (You Tube)-ல் காணொளிகளை ஒரே கோணத்தில் இருந்து தான் பார்த்து வந்தோம். இந்நிலையில், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில்,திரையில் ஓடும் காணொளிகளை ‘பல்வேறு கோணங்களில்’ (Multi Angle) இருந்து கண்டு ரசிக்க புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

எனினும், தற்போது அந்த வசதி சோதனைப் பதிவாக வெளியிடப்பட்டுள்ளதால், அனைத்து பயனர்களாலும் அதனைப் பார்க்க இயலாது. பல லட்சம் காணொளிகளையும், பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்களையும் கொண்டுள்ள யூ-டியூப், முதல் முறையாக இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

காணொளியின் வலது புறத்தில் கேமரா கோணங்களுக்கான thumbnails இருக்கும்.பயனர்கள் எந்த கோணத்தில் இருந்து காணொளியைக் காண விரும்புகின்றனரோ அந்த கோணத்தில் இருந்து காணொளியைக் காணலாம்.

#TamilSchoolmychoice

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, இனி நடக்க இருக்கும் நேரடி நிகழ்வுகளை மட்டுமே பல்வேறு கோணங்களில் காண இயலும். ஏற்கனவே உள்ள காணொளிகளை இவ்வாறு காண்பது சாத்தியமா என்பதை யூ-டியூப் தெளிவுபடுத்தவில்லை இது தொடர்பாக, யூ-டியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“பயனர்களுக்கு புதிய அனுபவத்தையும், வேறுபட்ட செயல்பாட்டையும் அளிப்பதற்காக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக உள்ள இந்த புதிய வசதியை ஒரு சில பயனர்கள் மட்டும் தற்போது காண இயலும். விரைவில், இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் பயன்படும் வகையில் மேம்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.