இதுவரை அஜித் படத்துக்கு இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ‘என்னை அறிந்தால்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நேற்று இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
படம் பார்த்த அனைவரும் கூறும்போது, ‘என்னை அறிந்தால்’ அஜித்தின் முக்கியமான படங்களில் ஒரு படமாக இருக்கும். இரண்டே முக்கால் மணி நேரம் படம் நகர்வதே தெரியவில்லை. அந்தளவுக்கு கவுதம் மேனன் மிகவும் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார்.
ரசிகர்களும் அந்தளவுக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தை ரசிப்பார்கள் எனவும் நம்புகின்றனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். விவேக், அருண் விஜய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.