Home கலை உலகம் மனநலம் பாதித்தவர்களுக்கு ‘என்னை அறிந்தால்’ பிடிக்காது – டுவிட்டரில் சிம்பு சர்ச்சை !

மனநலம் பாதித்தவர்களுக்கு ‘என்னை அறிந்தால்’ பிடிக்காது – டுவிட்டரில் சிம்பு சர்ச்சை !

616
0
SHARE
Ad

maxresdefaultசென்னை, பிப்ரவரி 6 – அஜித் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் குறித்த கருத்துக்கள் வழக்கம் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் சிம்பு அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. படம் பார்த்த அவர், “நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து”.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என டுவீட் செய்துள்ளார். இதை 830 பேர் இதுவரை மீண்டும் மறு டுவீட் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நீண்ட நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காத சிம்பு, இந்த டுவீட்டினால் மீண்டும் ஒரு பரபரப்பை துவக்கியுள்ளார். பிடிக்கவில்லை என்றால் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம் என, தற்போது இந்த டுவீட்டிற்கு பலர் பதிலளித்து வருகின்றனர்.

என்னை அறிந்தால் உண்மையிலேயே நல்ல படமாகவே இருக்கட்டும். அதற்காக அந்தப் படம் பிடிக்காதவர்களை எப்படி ஒருவர் மனநலம் தவறியவர் எனலாம்?

ஒருமுறை காதலித்தால்தான் காதல், பலமுறை காதலிப்பது விபச்சாரம் என்று ஒருவர் கூறினால் அது சிம்புவை காயப்படுத்துமா இல்லையா? என டுவிட்டரில் பல பொது ரசிகர்கள் சிம்புவை தாக்கி டுவிட் செய்து வருகின்றனர்.