Home நாடு பெர்டானா புத்ரா வளாகத்தில் நஜிப், ஜோகோ சந்திப்பு!

பெர்டானா புத்ரா வளாகத்தில் நஜிப், ஜோகோ சந்திப்பு!

590
0
SHARE
Ad

PRESIDENT REPUBLIC OF INDONESIAபுத்ரா ஜெயா, பிப்ரவரி 6 – புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ டோடோவை, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை சந்தித்தார்.

இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பு, பேராளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் இருநாட்டின் கடலோற எல்லை விவகாரங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர், நஜிப் தனது துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் சேர்ந்து, ஜோகோவிற்கும் அவரது மனைவி இரியானாவிற்கும் அதிகாரப்பூர்வ மதிய உணவு விருந்து அளிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

பின்னர், ஜோகோவி மலேசியாவிலுள்ள புரோட்டான் கார் தொழிற்சாலையைப் பார்வையிடுவார் என்றும் கூறப்படுகின்றது.

இந்தோனிசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன் முறையாக மலேசியாவுக்கு நேற்று வருகை தந்தார் ஜோகோ விடோடோ. மலேசிய மாமன்னரின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக தமது துணைவியாருடன் மலேசியா வந்துள்ளார்.