Home நாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் உலக அளவில் கோலாலம்பூருக்கு 9-வது இடம்!

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் உலக அளவில் கோலாலம்பூருக்கு 9-வது இடம்!

511
0
SHARE
Ad

Kuala-Lumpur-Sceneகோலாலம்பூர், பிப்ரவரி 6 – உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் 100 நகரங்களுக்கான பட்டியலில் கோலாலம்பூருக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க, அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகின்றது.

உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக கோலாலம்பூர் மாறியுள்ளது குறித்து கோலாலம்பூர் மாநகரசபைத் தலைவர் டத்தோஸ்ரீ  அகமட் பைசால் தலிப்  கூறுகையில், “கடந்த 2013-ம் ஆண்டில், 11.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இதன் மூலம் கோலாலம்பூரின் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அதிகரித்துள்ளது.”

“இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை மேலும் அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், கோலாலம்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12.3 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாவும் வர்த்தகமும் பொருளாதார வளர்ச்சியில் பிரிக்க முடியாத அங்கங்களாகி விட்டன.”

#TamilSchoolmychoice

“எனவே, பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில் நமது நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 2015-2025 ஆண்டுகளுக்கான சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்த பல்வேறு நிறுவனங்களும் அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இணைய தளங்கள் மூலமாகவும், அமைப்புகள் மூலமாக உலக அளவில் கோலாலம்பூருக்கான சுற்றுலா சிறப்பை பிரச்சாரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.