Home இந்தியா சுனந்தா கொலை வழக்கு: சசிதரூர் மகனிடம் போலிசார் விசாரணை!

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூர் மகனிடம் போலிசார் விசாரணை!

580
0
SHARE
Ad

shashi7-620x420புதுடெல்லி, பிப்ரவரி 5 – முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது மகனிடம் போலிசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் தங்கும் விடுதியின் அறையில் பிணமாகக் கிடந்தார்.

இந்நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த டெல்லி போலிசார் சுனந்தா வழக்கை கொலைவழக்காக பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சசி தரூரிடம் 2 முறை விசாரணை நடத்திய போலிசார் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும், சுனந்தாவின் இரண்டாவது கணவர் மூலம் பிறந்த ஷிவ் மேனனிடம்,

தரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே இருந்த பிரச்சனை பற்றியும் தன்னை யாராவது மிரட்டியது அல்லது ஐபிஎல் விவகாரம் பற்றி சுனந்தா ஷிவ் மேனனிடம் எதுவும் தெரிவித்தாரா என்பது பற்றியும் விசாரிக்க உள்ளனர்.