Home கலை உலகம் அஜீத் ரசிகர்களால் கண்ணீர் விட்டு அழுத அருண் விஜய்! (காணொளியுடன்)

அஜீத் ரசிகர்களால் கண்ணீர் விட்டு அழுத அருண் விஜய்! (காணொளியுடன்)

1081
0
SHARE
Ad

arun vijayசென்னை, பிப்ரவரி 5 – கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா, அருண் விஜய், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இன்று அதிகாலையில் இப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த மரியாதையைப் பார்த்து திரையரங்கிலேயே கண் கலங்கி அழுதார்.

Untitled‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் கிடைக்காத அங்கீகாரம், எனக்கு தல படத்தில் கிடைத்துவிட்டது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அருண் விஜய். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

#TamilSchoolmychoice

“அஜித்திற்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை என்றும், எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கவுதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் கூறியுள்ளார் அருண் விஜய்.