Home One Line P2 மாபியா: பாகம்-1: துருவங்கள் பதினாறு இயக்குனர் இயக்கத்தில் அருண் விஜய்!

மாபியா: பாகம்-1: துருவங்கள் பதினாறு இயக்குனர் இயக்கத்தில் அருண் விஜய்!

894
0
SHARE
Ad

சென்னை: துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாபியா: பாகம்-1.

இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படம் தமிழ் திரைப்பட கதைக்கூறும் விதத்தில் வேறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டதோடு, இரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. அவ்வாறே, மாபியா படத்தின் மீது தற்போது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,  இப்படத்தின் இரண்டாவது முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: