Home கலை உலகம் ‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்!

‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்!

1011
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் பாக்ஸர் படத்தின் முதல் தோற்றம் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. எவ்விதமான முன் அறிவிப்புமின்றி இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதன் காரணத்தை இப்படத்தின் நாயகனான அருண் விஜய் விளக்கம் அளித்துள்ளார். 

அதாவது, இப்படத்தின் முதல் தோற்றம் நேற்று திடீரென வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. இவ்விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அருண் விஜய் நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்

பல வருடங்களாக தமிழ் திரையுலகில் வெற்றிகளே கிடைக்காமல் ஒதுங்கியே இருந்த அருணுக்கு, அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம், மிகப்பெரிய வாய்ப்பைத் தேடிக் கொடுத்தது. அதன் பிறகு மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்த தடம் படம் இந்த வருடத்தின் சிறந்த வெற்றி படங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

#TamilSchoolmychoice

புதுமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் திரைப்படத்தில் உடலை முழுதாக மாற்றி குத்துச் சண்டை வீரராக அருண்விஜய் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்க் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதை குத்துச்சண்டை போட்டியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

இப்படத்தின் முதல் தோற்றத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்ததுஆயினும்,ஒரு சிலரின் நடவடிக்கையால் அது முன்னதாகவே அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.