Home Video புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்!

புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்!

1081
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 2019 -2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீத்தாராமன் நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

வரி விவகாரங்களைத் தொட்டு அவர் பேசும் போது, புறநானூற்றில் உள்ள பாடல் வரியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கம் கூறியது தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்றைப் பெற்றுள்ளது. முரணான கருத்துகள் வெளியான போதிலும், அவை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுவதாக பெரும்பாலான மக்கள் கருத்துரைத்துள்ளனர்.

இந்திய நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலாவின் அறிக்கை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்ததுபல்வேறு துறைகளுக்கான வரவு செலவு நிலவரங்களை தாக்கல் செய்யும் போது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் உள்ள 184-வது பாடலான யானை புக்க புலம் என்ற பாடலை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

#TamilSchoolmychoice

“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, …” என்று தொடங்கும் அப்பாடலை கூறியவாறு அதற்கான விளக்கத்தையும் அவர் ஆங்கிலத்தில் அளித்தார். அனைவரும் அவரின் விளக்கத்தைக் கேட்டு கை தட்டினர்.

அவ்வாறே, ஒரு நாட்டின் தலைவர் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடம் வரியை திரட்டினால் நாடு செழிக்கும். மாறாக நாட்டை ஆள்பவன் அறிவு குறைந்து, முறை அறியாமல், ஈவு இரக்கமில்லாமல் வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான். இதன் மூலம் நாட்டில் வரியை முறைப்படுத்த வேண்டியது, மக்கள் மீதான வரி சுமைகளை குறைத்து நாட்டை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த பாடலின் சுறுக்கமான விளக்கமாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பில் நிர்மலா சீதாராமன் பேசிய உரை இணைக்கப்பட்டுள்ளது (நன்றி புதிய தலைமுறை):