Home நாடு இந்தோனிசிய அதிபர் விடோடோ மலேசியா வருகை!

இந்தோனிசிய அதிபர் விடோடோ மலேசியா வருகை!

664
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 5 – இந்தோனிசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன் முறையாக மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார் ஜோக்கோ விடோடோ.

மலேசிய மாமன்னரின் அழைப்பை ஏற்று இன்று முதல் தமது துணைவியாருடன் மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்ளும் ஜோக்கோவை சிப்பாங் விமான நிலையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது துணைவியாருடன் எதிர்கொண்டு வரவேற்றார்.

Jokowi visits Malayia 5 Feb

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் வந்தடைந்த ஜோக்கோவுக்கு முக்கிய பிரமுகர்களை அறிமுகப்படுத்தி வைக்கின்றார் பிரதமர் நஜிப்.

Joko Widodo standing for national anthem Malaysia visit 5 Feb

இந்தோனிசிய அதிபருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் இருநாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டபோது மரியாதை செலுத்தும் ஜோக்கோவும், நஜிப்பும்..

Widodo M'sia visit

தனக்கு வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடும் ஜோக்கோ விடோடோ.

ஜோக்கோவின் வருகையைத் தொடர்ந்து இருநாடுகளின் உறவிலும் முன்னேற்றம் காணப்படும் என்றும் இருநாடுகளுக்கிடையில் இருந்து வரும் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று இரவு மலேசிய மாமன்னர் ஜோக்கோ தம்பதியருக்கு இரவு விருந்து வழங்கி கௌரவிப்பார்.

படங்கள்: EPA