Home நாடு மஇகா தலைமையகப் பொறுப்பை இளைஞர் பகுதி முருகேசனிடம் ஒப்படைத்தது!

மஇகா தலைமையகப் பொறுப்பை இளைஞர் பகுதி முருகேசனிடம் ஒப்படைத்தது!

646
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 5- மஇகா தேசிய இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் கடந்த சில நாட்களாக இருந்த இருந்த கட்சித் தலைமையக கட்டிடத்தின் பாதுகாப்புப் பொறுப்பை இன்று, கட்சியின் இளைஞர் பகுதி, மஇகா தேசியப் பொருளாளர் டத்தோ முருகேசனிடம் ஒப்படைத்தது.

இன்று காலை தான் தேசியத் தலைவரிடம் பேசியதாகவும், அவர் பொறுப்பாளராக நியமித்துள்ள கட்சியின் பொருளாளர் டத்தோ முருகேசன் வசம் சம்பந்தப்பட்ட சாவிகளையும், பாதுகாப்புப் பொறுப்பையும் முறைப்படி ஒப்படைக்க தான் ஒப்புக் கொண்டதாகவும் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜா தெரிவித்தார்.

Youth handing over security to Murugesan

#TamilSchoolmychoice

முருகேசனிடம் பொறுப்பை ஒப்படைக்கும் இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜா

கட்சியின் தேசியத் தலைவரையும், துணைத் தலைவரையும் சந்தித்து பிரதமர் கட்சியில் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து தாங்கள் இந்த முடிவு எடுத்ததாகவும் சிவராஜா தெரிவித்தார்.

தலைமையகக் கட்டிடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கட்சியின் நடப்புப் பொருளாளர் முருகேசனிடம், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஒப்படைத்துள்ளார்.

அதன் படி, இன்று மாலை 4 மணியளவில், இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா, முருகேசனை சந்தித்து கட்டிடத்தின் சாவியை வழங்கினார்.