Home இந்தியா துபாய்க்கு போட்டியாக குஜராத்தில் புதிய விமான நிலையம் – மோடி யோசனை!

துபாய்க்கு போட்டியாக குஜராத்தில் புதிய விமான நிலையம் – மோடி யோசனை!

513
0
SHARE
Ad

modiதோலேரா, பிப்ரவரி 7 –  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது செயல்படுத்த நினைத்த தோலேரா விமான நிலைய திட்டம், விரைவில் செயல்பட இருக்கிறது.

இந்த விமான நிலையம் சாத்தியமானால், லண்டன் ஹீத்ரோ-துபாய்-சிங்கபூர் வழித்தடத்தை விட லண்டன் ஹீத்ரோ-தோலேரா-சிங்கபூர் வழித்தடம் 322 கி.மீ குறைவாக இருக்கும். இதன் மூலம் உலகின் மையமாக விளங்கும் துபாய்க்கு மாற்றாக தோலேரா விளங்கும்.

குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தோலேரா, மொத்தமாக 920 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், அன்றைய முதல்வர் நரேந்திர மோடி அதிக ஆர்வ காட்டி வந்தார்.

#TamilSchoolmychoice

எனினும், பல்வேறு சூழ்நிலைகளால் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மோடி இந்திய அளவில் ஆட்சியைக் கைப்பற்றியதும், இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசு தற்போது வழங்கி உள்ளது.

இந்த திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வை ஜப்பானின் முக்கிய நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக தோலேரா அனைத்துலக விமான நிலையத்தின் பொது மேலாளர் அமித் சவ்தா கூறுகையில், “இந்த கனவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வந்தார்”.

airside-ca--ek“அதற்கு முக்கியக் காரணம், ஏற்கனவே உள்ள அகமதாபாத் விமான நிலையத்திற்கு நாளுக்குநாள் பயணிகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலை நீடித்தால், இன்னும் 5 வருடத்திற்குள் பயணிகளின் எண்ணிக்கை சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிடும்”.

“அதனை கருத்தில் கொண்டே தோலேரா விமான நிலையம் உருவாக்கப்பட இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். இந்த புதிய விமான நிலையம் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்து வரும் நிலையில், இதன் பணிகளில் அரசு மட்டுமல்லாது தனியாரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிறந்த கட்டமைப்புப் பணிகள், உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமல்லாது, சிவிலியன் விமானங்களுக்கும், ஏர்பஸ் ஏ380 விமானங்களுக்கு தனித்தனியான ஓடுபாதைகளும் இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

துபாய்க்கு போட்டியாக தோலேரா விமான நிலையம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், துபாய் ஐந்து தனித்தனியான ஓடுபாதைகளுடன் மிகப் பெரும் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.