Home இந்தியா டெல்லி சட்டசபை தேர்தல்: 70 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டசபை தேர்தல்: 70 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!

397
0
SHARE
Ad

delhi-electionபுதுடெல்லி, பிப்ரவரி 7 –  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு 55,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல், 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பாஜ, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. மொத்த வாக்காளர்கள் 1.33 கோடி பேர். இதில் ஆண்கள் 73.89 லட்சம், பெண்கள் 59.19 லட்சம் பேர். மூன்றாவது பாலினத்தை சேர்ந்தவர்கள் 862 பேர் ஆவர்.

#TamilSchoolmychoice

timthumbஇந்த தேர்தலில் சுமார் 1.50 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். மக்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் 12,177 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 714 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 191 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் சுமூகமாகவும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெறும் வகையில், 55,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 120 துணை ராணுவ வீரர்களும் அடங்குவர்.

voting1--621x414வாக்குச் சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடியும்.

கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வாக்குச் சாவடிகள் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை வரும் 10-ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் டெல்லியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது தெரிந்துவிடும்.