பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத, பாரதிய ஜனதாக் கட்சி கடந்த வாரம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தை காங்கிரஸ் கட்சியிடம் இழந்தது.
திங்களன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற காங்கிரஸ் தலைவர் கமல்நாத், விவசாயிகளின் 200,000 ரூபாய்க்கு அதிகமான கடன்களை தள்ளுபடி செய்தாக வேண்டும் என்றார்.
பயிர் விலையில் வீழ்ச்சி மற்றும் டீசல் மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக கடந்த மாதங்களில் விவசாயிகளின் மத்தியில் எதிர்ப்புகள் உயர்ந்து வந்தன.
சுமார் 3.4 மில்லியன் விவசாயிகள் இந்த அறிவிப்பின் வாயிலாக பயனடைய உள்ளதாக மாநில முதன்மைச் செயலாளர் ராஜேஷ் ரஜோரா கூறினார். மொத்தத் தொகையாக சுமார் 350 பில்லியன் ரூபாயிலிருந்து, 380 பில்லியன் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடியாகும் எனக் கூறப்படுகிறது.