Home கலை உலகம் ரஜினிகாந்திற்கும் ‘டத்தோ’ பட்டம் கொடுங்கள் – அரசாங்கத்திற்கு மலேசிய ரசிகர்கள் கோரிக்கை

ரஜினிகாந்திற்கும் ‘டத்தோ’ பட்டம் கொடுங்கள் – அரசாங்கத்திற்கு மலேசிய ரசிகர்கள் கோரிக்கை

801
0
SHARE
Ad

Rajnikanth_change_org_petition_07022015_840_573_100கோலாலம்பூர், பிப்ரவரி 7 – நடிகர் ஜாக்கிசானுக்கு அண்மையில் மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது போல், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் டத்தோ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி இணையம் வழியாக அவரது ரசிகர்கள் கோரிக்கை மனு ஒன்றை புத்ராஜெயாவுக்கு சமர்ப்பித்து வருகின்றனர்.

change.org என்ற இணையதள முகவரியில் ரவிசங்கர் செல்லக்கண்ணு என்பவரால் திறக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை மனுவை இங்குள்ள மலேசிய ரசிகர்கள் பலரும் ஆமோதித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

“கடந்த சில ஆண்டுகளில், சாருக் கான், ஜாக்கி சான் ஆகியோருக்கு டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்திற்கும் டத்தோ பட்டம் வழங்குங்கள்… தலைவா!!!” என்று ரவிசங்கர் செல்லக்கண்ணு கருத்துத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த கோரிக்கை மனு அனைத்துலக அளவில் ஆதரவாளர்களை எதிர்பார்க்காமல், மிகக் குறைவான ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டே திறக்கப்பட்டுள்ளது.

மொத்தமே 500 நபர்கள் ஆதரவு தெரிவிக்கும் அளவில் உள்ள இந்த கோரிக்கை மனுவில் இதுவரை 200 பேருக்கும் மேல் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.