சென்னை, பிப்ரவரி 7 – திருமணத்திற்கு பிறகும் திரிஷா நடிக்கும் திட்டத்தில் தான் இருக்கிறாராம். மேலும் இப்போது வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரது தோற்றம, மற்றும் நடிப்பு என பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதுவும் பெண் கதாபாத்திரங்களை மையாகக் கொண்டு உருவாக உள்ள படம். திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிக்க உள்ள இப்படத்திற்கு ‘போகி’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த ‘ப்ரியம்’ படத்தை இயக்கியவர்.
#TamilSchoolmychoice
எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கை தான் இந்த ’போகி’ படத்தின் கதை என இயக்குநர் பாண்டியன் தெரிவித்தார்.