Home இந்தியா டுவிட்டரில் 10 மில்லியன் பேர் மோடியை பின்பற்றுகின்றனர்!

டுவிட்டரில் 10 மில்லியன் பேர் மோடியை பின்பற்றுகின்றனர்!

582
0
SHARE
Ad

புதுடில்லி, பிப்ரவரி 12 – உலகின் முக்கிய தலைவர்களை டுவிட்டர் நட்பு ஊடகத்தின் மூலம் பொதுமக்கள் பின்பற்றும் வழக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் டுவிட்டர் இணைய நட்பு ஊடகத்தின் மூலம் பிரதமர் மோடியை பின்பற்றுவோர் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்கி உள்ளதாக புள்ளி விவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.

modi

#TamilSchoolmychoice

அரசியல்வாதி என்ற அடிப்படையில் உலகளவில் டுவிட்டர் நட்பு ஊடகத்தில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இரண்டாம் இடத்தில் பிரதமர் மோடியும் இடம் பெறுகி்ன்றனர்.

அதே நேரத்தி்ல் உலகளவில் பிரசித்தி பெற்ற தலைவர்களின் வரிசையில் அமெரி்க்க அதிபர் ஓபாமா, கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவரை தொடர்ந்து மூன்றாம் இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் உலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளில் பிரதமர் பதவியில் இருப்பவர்களி்ல் மோடி மட்டுமே கடந்த 2009-ம் ஆண்டு முதல் டுவிட்டர் இணையப் பக்கத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் புள்ளிவிவர ஆய்வில் கூறப்பட்டுள்ளது