Home நாடு சாலையில் நிர்வாணமாக சென்ற பெண் கைது!

சாலையில் நிர்வாணமாக சென்ற பெண் கைது!

587
0
SHARE
Ad

handcuff

கோலாலம்பூர், பிப்ரவரி 12 – கடந்த வெள்ளிக்கிழமை பட்டப் பகலில் சாலையில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவரால் கோலாலம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கோலாலம்பூரிலுள்ள தேசிய மசூதியில் இருந்து கம்போங் அத்தாப் வரையில் ஒவ்வொரு துணியாக கழற்றி வீசி எறிந்த படி அந்த பெண் சென்றார் என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு தலைவர் சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து சைனுடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவரிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்று அந்த 20 வயது இந்தோனேசியப் பெண்ணை கைது செய்தோம். கோலாலம்பூர் மனநல மருத்துவமனைக்கு அவரை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை செல்பேசி வழியாக படம் பிடித்த சிலர் அதை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த 12 நொடிகள் கொண்ட காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.