Home கலை உலகம் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயன்!

மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயன்!

634
0
SHARE
Ad

sivakarthikeyanமதுரை, பிப்ரவரி 13 – ’ஆகடு’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு ‘ஸ்ரீமந்துடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது.

சென்ற வருடம் தெலுங்கின் முன்னனி நடிகர் பட்டியலில் இடம்பிடித்த தெலுங்கின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம்.

இவரது பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது, மேலும் ‘நந்து’, ‘வரேண்டா மதுரைக்கு’ ,’பிஸ்னஸ் மேன்’ என பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்காக மதுரையில் படப்பிடிப்பில் உள்ளார் மகேஷ் பாபு. படப்பிடிப்பில் மகேஷ் பாபு இருப்பது தெரிந்து அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அவரை சந்தித்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் ‘ மகேஷ் பாபுவை சந்திதேன், ரொம்ப எளிமையான மற்றும் இளகுவானவர், உங்கள் நேரத்தை ஒதுக்கி தனன்கு வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி மகேஷ்’ என டுவீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மகேஷ் பாபு நடிக்கும் ’ஸ்ரீமந்துடு’ படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க,  ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.