Home நாடு சுப்ரா தலைமையில் மஇகா மத்திய செயலவை கூட்டம் நடைபெற்றது!

சுப்ரா தலைமையில் மஇகா மத்திய செயலவை கூட்டம் நடைபெற்றது!

461
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், பிப்ரவரி 13 – மஇகா-வின் இடைக்கால மத்திய செயலவையின் கூட்டம் இன்று மாலை திட்டமிட்டிருந்த படி அக்கட்சியின் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கங்களின் பதிவிலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்குபெற்றனர். இதன் மூலம் இன்று மாலை நடத்தப்பட்ட கூட்டம் அதிகாரப்பூர்வமானது என்று கூறப்படுகின்றது.

unnamed (1)

#TamilSchoolmychoice

கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இன்று நடைபெறவிருக்கும் கூட்டம் செல்லாது என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.