Home இந்தியா இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை – மோடி முடிவு!

இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை – மோடி முடிவு!

419
0
SHARE
Ad

modi-nawaj_20141125081624புதுடெல்லி, பிப்ரவரி 14 – இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக இருநாடுகளின் வெளியுறவு செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாக, காஷ்மீர் பிரிவினைவாதிகளை, பாகிஸ்தான் தூதர் சந்தித்து பேசினார். இதையடுத்து, பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி, சார்க் நாடுகளின் தலைவர்களை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேசும்போது, இரு தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவது குறித்து மோடி பேசினார். இதில், பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, மோடியின் அறிவுறுத்தலின்படி மத்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு சென்று பேச்சு நடத்த உள்ளார்.