Home நாடு மஇகா தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் நஜிப்!

மஇகா தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் நஜிப்!

357
0
SHARE
Ad

Najib Razakகோலாலம்பூர், பிப்ரவரி 14 – மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க, மஇகா தலைவர்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் சந்திக்கவுள்ளார்.

“நாளையோ, திங்கள் அல்லது செவ்வாய்கிழமையோ (மஇகா துணைத்தலைவர்) டத்தோஸ்ரீ (டாக்டர் எஸ்) சுப்ரமணியத்தை மீண்டும் ஒருமுறை சந்திக்கவுள்ளேன்” என்று நஜிப் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மஇகா தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலை சந்திப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நஜிப் பழனிவேலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னதாக இன்று பழனிவேல் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மஇகா தேர்தல் குறித்து விடுத்துள்ள உத்தரவுகளை திரும்பப் பெறவில்லை என்றால் சங்கங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக பழனிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.