Home தொழில் நுட்பம் ‘வாட்ஸ்அப்’ செயலியின் மிகப் பெரும் குறைபாடு கண்டுபிடிப்பு! 

‘வாட்ஸ்அப்’ செயலியின் மிகப் பெரும் குறைபாடு கண்டுபிடிப்பு! 

565
0
SHARE
Ad

image82கோலாலம்பூர், பிப்ரவரி 16 – நீங்கள் தினமும் பயன்படுத்தும் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) செயலி பாதுகாப்பானது என்று நினைத்துக் கொண்டிருந்தால், இன்று முதல் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு ‘வெப் சர்வர்’ (Web Server), இரண்டாம் நிலை வாட்ஸ்அப் கணக்கு, ரூட் செய்யப்பட்ட அண்டிரொய்டு திறன்பேசி, பிஎச்பி நிரல் சார்ந்த அறிவு இவை மட்டும் இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மிக எளிதாக ஹேக் செய்து உங்கள் ‘பிரைவசி செட்டிங்க்ஸ்’ (Privacy Settings) வரை பார்க்க இயலும்.

டட்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் என்பவர் இதனை செய்து காட்டி உள்ளார். இவர் உருவாக்கி இருக்கும் ‘வாட்ஸ்அப்ஸ்பை பப்ளிக்’ (WhatsAppSpy Public) என்னும் பயன்பாட்டைக் கொண்டு பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை மிக எளிதாக ஹேக் செய்ய இயலும்.

#TamilSchoolmychoice

இது குறித்து மைக்கேல் ஸ்வீரின்க் கூறுகையில், “வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருக்கும் இணைய குறைபாடுகளை கண்டறிவதற்காகத்தான் நான் இந்த திட்டத்தை தொடர்ந்தேன். இதன் முடிவு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.”

“நான் வாட்ஸ்அப்பின் இந்த குறைபாடு பற்றி உடனடியாக எனது இணைய பக்கத்தில் எழுதினேன். ஆனாலும், நீங்கள் அதனை உணரவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் வாட்ஸ்அப் நிறுவனம், மைக்கேல் ஸ்வீரின்க் கண்டுபிடிப்பிற்கு இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.