Home நாடு “சிறையில் படுக்கை வசதி இல்லை; முதுகு வலியால் அன்வார் அவதி” – வான் அசிசா தகவல்

“சிறையில் படுக்கை வசதி இல்லை; முதுகு வலியால் அன்வார் அவதி” – வான் அசிசா தகவல்

565
0
SHARE
Ad

Wan-Azizah1-300x199கோலாலம்பூர், பிப்ரவரி 16 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு சிறையில் சரியான படுக்கை வசதி இல்லாததால் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாக அவரது துணைவியார் வான் அசிசா பெர்மாத்தாங் பாவ் செபராங் பிறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சிறைக்கு சென்று தனது கணவர் அன்வாரை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகக் கூறிய வான் அசிசா, சரியான படுக்கை வசதி இல்லாமல் ஒரு அங்குல உயரம் கொண்ட மெத்தை ஒன்று மட்டும் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு மேஜை, நாற்காலிகளும் இல்லை என்றும் வான் அசிசா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது கணவர் அரசியல் கைதி என்றாலும் நாங்கள் அவருக்கு சிறப்பு சலுகைகளை கேட்கவில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே போதும். முடிந்தால் அவரது ஆரோக்கியம் கருதி படுக்கை வழங்கப்பட வேண்டும்” என்று வான் அசிசா கூறியுள்ளார்.