Home கலை உலகம் வில்லன் நடிகர்கள் மத்தியில் ‘உத்தம வில்லன்’ இசையை வெளியிட கமல் முடிவு!

வில்லன் நடிகர்கள் மத்தியில் ‘உத்தம வில்லன்’ இசையை வெளியிட கமல் முடிவு!

648
0
SHARE
Ad

uthama villanசென்னை, பிப்ரவரி 17 – ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெய் ராம், என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தில் ஒரு கமல் வில்லனாகவும் வருகிறார்.

படத்தின் பெயரே ‘ உத்தம வில்லன்’ என்பதால் இதுவரை தமிழில் வில்லன்களாக நடித்து கலக்கிய முக்கிய வில்லன்களின் மத்தியில் இசையை வெளியிட கமல் முடிவு செய்துள்ளாராம்.

kamal-Villanஇதில் நம்பியார் உள்ளிட்ட மறைந்த மாபெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இசை வரும் மார்ச் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் ஏப்ரல் 2-ஆம் தேதி என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.