Home கலை உலகம் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் விவகாரம்: ரஜினிக்கு தயாரிப்பளர் சங்கம் ஆதரவு!

‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் விவகாரம்: ரஜினிக்கு தயாரிப்பளர் சங்கம் ஆதரவு!

580
0
SHARE
Ad

Rajini_soloசென்னை, பிப்ரவரி 18 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பவர் மக்கள் மனதில் என்றும் வாழ்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘லிங்கா’ படம் கடும் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சில விநியோகஸ்தர்கள் நஷ்டமான தொகையை திருப்பி தரவேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக விரைவில் ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டத்தை செய்யவுள்ளனர்.

ஆனால், தற்போது தமிழ் நாடு தயாரிப்பளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அவர்கள் முறைப்படி எங்கு பேச வேண்டுமோ, அங்கு தான் இது குறித்து பேச வேண்டும்.

#TamilSchoolmychoice

இது ரஜினியின் பெயரை திட்டமிட்டு கெடுப்பதற்கான சதி’ என கூறியுள்ளனர். விரைவில் நடிகர் சங்கமும் இது குறித்து நல்ல முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.