Home உலகம் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா–வங்காளதேச ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்!

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா–வங்காளதேச ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்!

557
0
SHARE
Ad

Bangladesh-Cricket-World-Cup-2015-Squad-HD-Imagesபிரிஸ்பேன், பிப்ரவரி 21 – உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (சனிக்கிழமை) பிரிஸ்பேனில் நடைபெறும் 11–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–வங்காளதேச (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் மலேசிய நேரப்படி காலை 11.15 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா–வங்காளதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடைபெறும் பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது.

இதனால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்றும் பிரிஸ்பேன் பகுதியில் கன மழை பெய்ய 100-% சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் இந்த போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும் போட்டி ரத்து குறித்து இதுவரை எந்த அறிவிப்பு விடப்படவில்லை.

மேலும் மழை காரணமாக பிரிஸ்பேனில் நேற்று நடக்க இருந்த ‘ஏ’ லீக் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.