ஹாலிவுட், – பிப்ரவரி 23 – (மலேசிய நேரம் 11.00) – 87வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தற்போது அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் டோல்பி (Dolby) அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்க நேரப்படி ஞாயிறு இரவு (22 பிப்ரவரி) இந்த விழா தொடங்கியது.
முதலாவது விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜே.கே.சைமன்ஸ் (J.K.Simmons) விப்லாஷ் (Whiplash) என்ற படத்தில் நடித்ததற்காகப் பெற்றார்.
இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (Grand Budapest Hotel) படத்திற்காக மிலினா கேனோநிரோ (Milena Canonero) பெற்றார்.
மூன்றாவதாக அறிவிக்கப்பட்ட சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (Grand Budapest Hotel) படத்திற்காக பிரான்சிஸ் ஹன்னோன் மற்றும் மார்க் கூலியர் (Frances Hannon and Mark Coulier) பெற்றனர்.
அடுத்து அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதை போலந்து நாட்டின் ‘இடா’ (Ida) என்ற படம் பெற்றது. பாவல் பாவ்லிகவுஸ்கி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் ஹாலிவுட் நகரின் டோல்பி அரங்கின் ஒரு தோற்றம்
(மேலும் ஆஸ்கார் விருதுகள் செய்திகள் தொடரும்)
படங்கள்: EPA