Home கலை உலகம் ‘உத்தம வில்லன்’ ஒலிப்பதிவாளருக்கு ‘ஆஸ்கர்’ விருது!

‘உத்தம வில்லன்’ ஒலிப்பதிவாளருக்கு ‘ஆஸ்கர்’ விருது!

615
0
SHARE
Ad

Uthamavillan-trailer-421x270சென்னை, பிப்ரவரி 25 – ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘உத்தம வில்லன்’ . இப்படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தின் இசை மார்ச் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது படத்திற்கு பின்னணி ஒலிப்பதிவுகள் செய்து வருபவர் க்ரெய்க் மேன். இவருக்கு சமீபத்தில் ‘விப்லாஷ்’ படத்தில் சிறந்த பின்னணி ஒலிக்கலவைக்காக ஆஸ்கர் கிடைத்துள்ளது.

uththama-villan-1st-look‘உத்தம வில்லன்’ படத்திற்கு ஹாலிவுட் சினிமா தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் ஒலிப்பதிவு செய்கிறார் என்பதே பெரிய விளம்பரமாக இருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது அந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பக் கலைஞர் க்ரெய்க் மேன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கின்றார் என்பது,  ‘உத்தம வில்லன்’ படத்திற்காக கூடுதல் விளம்பரத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.