Home உலகம் சிறுவர்களை தீவிரவாதிகளாக உருவாக்கும் ஐஎஸ்ஐஎஸ்! (காணொளியுடன்) 

சிறுவர்களை தீவிரவாதிகளாக உருவாக்கும் ஐஎஸ்ஐஎஸ்! (காணொளியுடன்) 

563
0
SHARE
Ad

isisடமாஸ்கஸ், பிப்ரவரி 24 – ஐஎஸ்ஐஎஸ்-ன் கடந்த ஒரு ஆண்டுகால செயல்பாடுகள் உலக நாடுகளை பதற்றம் அடைய வைப்பதாக உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் மதப்போராட்டத்தை வெளிப்படுத்தி வரும் அந்த இயக்கம், ஆண்கள் பெண்கள் என எத்தகைய பேதமும் பார்க்காமல் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக ஈவு இரக்கமின்றி கொன்றுகுவித்து வருகின்றது.

அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஈராக், சிரியா, லிபியாவை மற்றும் சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய தேசமாக மாற்றுவது. இதற்காக எத்தகைய காரியங்களிலும் ஈடுபடும் துணிச்சலை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளின் பிணைக் கைதிகளைக் கொன்று அவற்றைக் காணொளியாக்கி உலகை அச்சுறுத்தி வரும் அவர்கள், இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

isis,சுமார் 9 நிமிடம் ஓடக்கூடிய அந்த காணொளியில், 8-12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கடுமையான தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

இராணுவப் பயிற்சியில் நிற்பது போல் சுமார் 100 சிறுவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று போர்ப் பயிற்சி மற்றும் தீவிரவாத பயிற்சிகளை கற்று வருகின்றனர். இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கருப்பு நிற கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

isis,,நவீன ரக துப்பாக்கியை இயக்குதல், வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அபாயகர பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்து அவர்களை இளம் வயதிலேயே உலக சமுதாயத்திற்கு விரோதமானவர்களாக மாற்றுவதே அவர்களின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இதன் காணொளியை கீழ் காண்க:

https://www.youtube.com/watch?v=2ogGIEHXcZw