தனக்கான தனி பாணியில் படத்தினை இயக்கி மக்களை கவர்ந்தவர். கமல்ஹாசனை வைத்து ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.சி.சக்தி.
அப்படத்தில் கமல்ஹாசனை முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி பெரிதும் பேசப்பட்டவர். அவரின் மூன்றாவது படம் “தர்மயுத்தம்” ரஜினியை வைத்து இயக்கினார். மேலும் விஜயகாந்தை வைத்து “மனக்கணக்கு” என்ற சிறந்த படத்தினையும் இயக்கியவரும் இவரே.
சிறை, தவம், பத்தினிப்பெண் போன்ற வெற்றிப்படங்களைத் தந்தவர் ஆர்.சி.சக்தி. பத்தினி பெண் படம் 1993ல் வெளியாகி தமிழ்நாடு மாநில விருதில் சிறந்த படம் மற்றும் சிறந்த வசனம் சேர்த்து இரு விருதுகளை பெற்றது.
கிராம மக்கள் அனைவரும் பாரட்டியதோடு இல்லாமல், சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர். சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.
அடுத்து பொற்சிலை, அன்னை வேளாங்கண்ணி போன்ற படங்களில் திரைக்கதை எழுதினார். ஆர்.சி.சக்தியும் கமலும் நெருங்கிய தோழமையுடையவர்கள். கடந்தாண்டு ஆர்.சி.சக்தி, தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.சி.சக்தியின் மறைவு தமிழ் திரையுலகையே சேகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.