Home இந்தியா எச்-1பி விசா: இந்தியர்களுக்கு அமெரிக்கா புதிய சலுகை!

எச்-1பி விசா: இந்தியர்களுக்கு அமெரிக்கா புதிய சலுகை!

594
0
SHARE
Ad

US-H-1Bவாஷிங்டன், பிப்ரவரி 26 – அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா மூலம் சென்று அங்கு வேலைபார்த்து வரும் திருமணமான இந்தியர்கள் தங்கள் துணையையும் அங்கு பணியில் அமர்த்துவதற்கான விசாவை வருகின்ற மே 26-ம் தேதி முதல் வழங்கமுடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் உயர் அலுவலக நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இந்தியர்களின் பங்கு இன்றியமையாததாக மாறி வருகிறது.

இந்தியர்களின் வரவை ஊக்கப்படுத்தி வரும் அமெரிக்கா, தற்போது இந்தியர்களுக்கு இந்த புதிய விசா சலுகையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்,

#TamilSchoolmychoice

“அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு வரும் மே மாதம் 26 முதல் H-1B விசாகாரர்களின் மனைவி அல்லது கணவனுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் விசா  விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளது”

“அவர் ஒருமுறை படிவம் I-765 மற்றும் H-4 துணை என்ற அங்கீகார அட்டை பெற்று விட்டால் போதும் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய துவங்கலாம்” என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் பல திறமையான இந்தியர்கள் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல தயாராகி வருவதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.