Home நாடு செம்பாக்கா இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடாது – நஜிப் அறிவிப்பு

செம்பாக்கா இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடாது – நஜிப் அறிவிப்பு

844
0
SHARE
Ad

NAJIB TUN RAZAKகோலாலம்பூர், பிப்ரவரி 25 – எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள செம்பாக்கா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும், நாட்டின் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக வெள்ளப் பேரிடர் மீட்பிலும், மக்களை ஒன்று படுத்துவதிலும் தேசிய முன்னணி கவனம் செலுத்தும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, புற்றுநோய் காரணமாக கிளந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசாரும், செம்பாக்கா சட்டமன்ற தொகுதித் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

செம்பாக்கா இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 10-ம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் மார்ச் 18-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளையில், அஞ்சல் வழி வாக்குப்பதிவுக்கான விண்ணப்பம் வரும் மார்ச் 12-ம் தேதியோடு நிறைவடையும் என்றும், வெளிநாட்டில் வாழும் மலேசியர்களுக்கான அஞ்சல் வழி வாக்குப்பதிவு மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவடையும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.