Home நாடு அன்வார் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை நீதித்துறை முடிவு செய்யும் – சாஹிட்

அன்வார் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை நீதித்துறை முடிவு செய்யும் – சாஹிட்

516
0
SHARE
Ad
Ahmad-Zahid-Hamidi

கோலாலம்பூர், பிப்ரவரி 26 – அரச மன்னிப்பு கோரும் மனு நிலுவையில் இருப்பதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்க முடியுமா? என்பதை நீதித்துறை தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் நீதித்துறை தலைவரிடம் உள்ளது. அதைவிடுத்து அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும்” என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று துணை உள்துறை அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாபர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்கு சபாநாயகரிடமும், சிறை தலைவரிடமும் அனுமதி கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice