Home இந்தியா சென்னையில் விமானத்தின் சக்கரம் வெடித்தது – 150 பயணிகள் உயிர் தப்பினர்!

சென்னையில் விமானத்தின் சக்கரம் வெடித்தது – 150 பயணிகள் உயிர் தப்பினர்!

572
0
SHARE
Ad

air indiaசென்னை, பிப்ரவரி 26 – சென்னையில் தரை இறங்கும் போது விமானத்தின் சக்கரம் வெடித்ததால், விமானத்தில் இருந்த 150 பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐதராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 150 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தை நெருங்கியது.

விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரை இறக்க முயன்ற போது விமானத்தின் சக்கரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினார்கள்.

#TamilSchoolmychoice

இதையடுத்து விமானி திறமையாக செயல்பட்டு சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கினார். உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.