Home நாடு இந்திய தூதரக ஊழியரிடம் 25 ஆயிரம் ரிங்கிட் கொள்ளை!

இந்திய தூதரக ஊழியரிடம் 25 ஆயிரம் ரிங்கிட் கொள்ளை!

569
0
SHARE
Ad

Crime-Pixகோலாலம்பூர், பிப்ரவரி 27 – இந்திய தூதரக ஊழியரிடமிருந்து ஆயுதம் ஏந்திய 4 மர்ம நபர்கள் 25 ஆயிரம் ரிங்கிட்டை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.

நேற்று வியாழக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் இந்திய தூதரகத்தின் நிதி அதிகாரியும், தலைமைக் காவலரும், தூதரகம் அமைந்துள்ள மெனரா 1 மவுண்ட் கியாராவின் முன்பகுதியில் காருக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் நிதி அதிகாரியை அணுகினர்.

“துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகியவற்றுடன் வந்த 4 பேரிடமிருந்து பணத்தைக் காப்பாற்ற தூதரக அதிகாரியும் காவலரும் பெரு முயற்சி எடுத்துள்ளனர். எனினும் மர்ம நபர்கள் இருவரிடமிருந்தும் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்,” என்று கோலாலம்பூர் சிஐடி தலைவர் சைனுடின் அகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கொள்ளையர்கள் 4 பேரும் முகத்தை மறைக்கும் தலைகவசம், டி-சட்டை, ஜீன்ஸ் கால் சட்டை அணிந்திருந்தனர் என்பது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் வழி தெரிய வந்துள்ளது.