Home உலகம் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 408 ஓட்டங்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா!

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 408 ஓட்டங்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா!

558
0
SHARE
Ad

amla-600சிட்னி, பிப்ரவரி 27 – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 408 ரன்களை குவித்துள்ளது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள், சிட்னி மைதானத்தில் மோதின.

மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்திடம் தோல்வியும், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளிடம் வெற்றியும் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தளவில், ஜிம்பாப்வேயிடம் வெற்றியும், இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துள்ளது.

ஆகையால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

#TamilSchoolmychoice

தொடக்க ஆட்டக்காரர் டி காக், 12 ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில் அவுடாகி வெளியேறினார். இருப்பினும், ஹசிம் ஆம்லா மற்றும் டு பிளெசிஸ் ஜோடி, மேற்கொண்டு விக்கெட் வீழாமல் பார்த்துக் கொண்டனர்.

70 பந்துகளில் 62 ரன்களை எடுத்த டு பிளெசிஸ் மற்றும் 88 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த ஆம்லா ஆகியோர் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

australia_vs_southafrica_2odi_00229.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்கா எடுத்திருந்த நிலையில்தான் ரிலே ரோசவ் மற்றும் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி அதிரடியை ஆரம்பித்தது.

கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் 52 பந்துகளில் சதம் அடித்தார். அதன்பிறகு மேலும் உக்கிரம் அடைந்தவராய் கடைசி ஓவரில் 4 சிக்சர், 1 பவுண்டரி, விளாசி 66 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார் ஏபிடி வில்லியர்ஸ்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் என்ற இமாலய ரன்னை குவித்தது தென் ஆப்பிரிக்கா. மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ்கெய்ல், ஏபிடி வில்லியர்சுக்கு பதிலடி தருவாரா, என்ற எதிர்பார்ப்புடன் 2-வது பேட்டிங் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.