சாதாரண சமையல் மிளகாய், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், சீனத்து மிளகாய், ஊசி மிளகாய், குண்டு மிளகாய் என மிளகாயில் பல வகைகளை உள்ளன.
அனைத்து மிளகாயின் இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. மிளகாயின் இலையிலேயும் மருத்துவ குணங்கள் மலிந்துள்ளன. இலைகள் சற்று கசப்பு சுவையுடையவை. இவை உஷ்ணத் தன்மையைப் பெற்றவை அல்ல.
மிளகாயில் கேப்ஸைசின் என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இதுவே மிளகாய் காரமானதாகவும் சுவாசத்தில் எரிச்சலூட்டும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது. இந்த கேப்ஸைசின் என்னும் சத்து நுண்கிருமிகளை அழிக்க வல்லது.
புற்றுநோய் கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும், வலியைப் போக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோய்க்கு எதிரானதாகவும் விளங்குகிறது என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் இது எல்.டி.எல் என்று குறிக்கப்பெறும் கெட்ட கொழுப்புசத்தைக் குறைக்கக் கூடியது என்றும் தெரிவிக்கின்றது.
திசுக்கள் ஆரோக்கியம் பெற்று இரத்த நாளங்கள், தோல் உட்சுரப்பிகள், எலும்புகள் ஆகியவை செம்மை பெற இந்த கொலாஜன் என்னும் சத்து உபயோகமாகின்றது.
200 கிராம் மிளகாய் தூளோடு 100கிராம் மிளகுத் தூள் சேர்த்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து தைல பதமாகக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை குளித்தால் அனைத்து விதான தலை வலிகளும் தீர்ந்து போகும்.