Home தொழில் நுட்பம் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் புதிய முயற்சி!

தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் புதிய முயற்சி!

653
0
SHARE
Ad

facebook,வாஷிங்டன், பிப்ரவரி 28 – இளைஞர்கள் தற்கொலைகளைத் தடுக்க முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் தங்கள் கணக்குகளில் பதிவுகளை அனுப்பி வந்தால்,

அவற்றைக் கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய உதவி தொலைபேசி சேவையும் உருவாக்கி உள்ளது.

நம்மை சுற்றி உள்ள சமூகத்தில் பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி நமது வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக மாறி வரும் பேஸ்புக்கில், பயனர்கள் தங்கள் மனநிலை வெளிப்படுத்தும் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பலர் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதையும் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் இதற்கு முடிந்த அளவு தீர்வு காண பேஸ்புக், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய வசதியை உருவாக்கியுள்ளது.

‘டைம்லைன்’ (Timeline)-ல் பயனர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையுடன் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தால், நாம் அந்த பதிவு பற்றி ‘பேஸ்புக் ரிப்போர்ட்’-ல் தெரிவிக்கலாம்.

அதேபோல், அந்த பதிவை பார்ப்பவர்களும் தற்கொலை செய்ய முற்படும் நபருக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். அவருக்கு ஆதரவாக மற்றொரு பேஸ்புக் நண்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது தற்கொலையை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பிட்ட அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்யும் பேஸ்புக், தற்கொலை எண்ணத்தில் உள்ளவருக்கு தக்க உதவிகளை வழங்கும். அந்த நபர் மற்றொரு முறை பேஸ்புக்கை திறக்கும் பொழுது தானாக நிறைய ஆறுதல் செய்திகள் அடங்கிய அழகிய திரைகள் காட்சிபடுத்தப்படும்.

இதுபற்றி வாஷிங்டனிலுள்ள போர்பிராண்ட் சேவை அமைப்பின் திட்ட மேலாளர் ஸ்டீபன் பால் கூறுகையில், “தற்கொலைகளை தடுக்கும் இந்த புதிய வசதி பேஸ்புக்கில் கொண்டு வரப்பட்டது பாராட்டத்தக்கது.

மனவலியுடன் இருக்கும் ஒருவரை இணையம் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல்களை வழங்க ஒருவர் படித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.”

“அந்த நபரின் ரிப்போர்டை ஆய்வு செய்து அவருக்கு பேஸ்புக் மூலம் உதவி செய்யலாம். பலருடைய உயிரை காப்பாற்றும் சக்தி இந்த வசதிக்கு உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.