Home நாடு குடும்பத்தை தற்காத்துக் கொள்ளவே ஹராக்கா நாளேடு மீது வழக்கு – நஜிப்

குடும்பத்தை தற்காத்துக் கொள்ளவே ஹராக்கா நாளேடு மீது வழக்கு – நஜிப்

535
0
SHARE
Ad

najibஸ்ரீ அமான், பிப்ரவரி 28 – தனது குடும்பத்தை தற்காத்துக் கொள்ளும் விதமாகவே ஹராக்கா நாளேடு மீது வழக்கு தொடுப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.

“எனது குடும்பத்தின் மதிப்பை, புகழைக் குலைத்துள்ளனர். எனவே நான் வழக்கு தொடரவோ அல்லது அவர்கள் கூறியதை திரும்பப் பெற வலியுறுத்தவோ வேண்டும்,” என வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நஜிப் குறிப்பிட்டார்.

ஹராக்கா நாளேட்டில் வெளியான செய்தி அவதூறானது என்றும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் குறிப்பிட்ட அவர், செய்திக்குரிய ஆதாரங்களையும் அந்நாளேட்டுத் தரப்பு வெளியிடவில்லை என்றார்.

#TamilSchoolmychoice

“எனவே என்னையும் எனது குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது,” என்றார் பிரதமர் நஜிப்.இது தொடர்பாக எழுப்பப்பட்ட மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்தார்.

அண்மையில் 1MDB குறித்தும் பிரதமரின் வளர்ப்பு மகன் ரியாஸ் அசிஸ் குறித்தும் ஹராக்கா நாளேடு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது