Home தொழில் நுட்பம் ‘அண்டிரொய்டு பே’ திட்டத்தை அறிவிக்க காத்திருக்கும் கூகுள்!

‘அண்டிரொய்டு பே’ திட்டத்தை அறிவிக்க காத்திருக்கும் கூகுள்!

548
0
SHARE
Ad

android-paypal1சான் பிரான்சிஸ்கோ, மார்ச் 1 – கூகுள்  நிறுவனம் எதிர்வரும் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள்  மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் ‘அண்டிரொய்டு பே’ (Android Pay) வசதியை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாம்சுங் நிறுவனம் அடுத்த வாரம் வெளியிட இருக்கும் சாம்சுங் எஸ் 6 திறன்பேசியுடன், தனது நீண்டகால எதிர்பார்ப்பான ‘பே பால்’ (PayPal) திட்டம் பற்றி அறிவிக்க இருப்பதாக சாம்சுங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் சாம்சுங் திறன்பேசிகளில் சாத்தியமாகும். ஆப்பிள் நிறுவனமும் தனது ‘ஆப்பிள் பே’ (Apple Pay) திட்டத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறது.

#TamilSchoolmychoice

தனது அடுத்தடுத்த தயாரிப்புகளில் இந்த வசதியை பாதுகாப்பானதாக உருவாக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஆப்பிள் புகுத்த இருப்பதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கூகுள் தனது அண்டிரொய்டு பே வசதி குறித்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே திறன்பேசி தளத்திற்கான பணப்பரிமாற்றத்திற்கு ‘கூகுள் வாலெட்’ (Google Wallet) வசதியை ஏற்படுத்தி இருந்தாலும், ஆப்பிள் பேயை ஒப்பிடுகையில் வாலெட் வசதிக்கு பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு  இருக்கவில்லை.

தற்போது சாம்சுங் நிறுவனமும் இந்த திட்டத்தில் களமிறங்கி உள்ளதால், கூகுள் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த முயற்சியில் இறங்கி உள்ளது. எனினும், அண்டிரொய்டு பே மற்றும் சாம்சுங்கின் பே பால் திட்டங்கள், ஆப்பிள் பே திட்டத்திற்கு ஈடாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்