Home இந்தியா 2015-16-ஆம் ஆண்டிற்கான பட்ஜெடை இன்று தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி !

2015-16-ஆம் ஆண்டிற்கான பட்ஜெடை இன்று தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி !

514
0
SHARE
Ad

india-budget-புதுடெல்லி, பிப்ரவரி 28 – மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே 2015-16-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

மோடி அரசின் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்கள், வருமானவரி உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மானியங்கள் குறைப்பு, சரக்கு மற்றும் சேவை குறித்து அருண் ஜேட்லி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதிகள் இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற அவரது கனவு திட்டங்களுக்கும், நிதி சீர்திருத்த திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.