Home கலை உலகம் திரைக்கதை, படத்தயாரிப்பில் களமிறங்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்!

திரைக்கதை, படத்தயாரிப்பில் களமிறங்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்!

661
0
SHARE
Ad

AR-Rahman-300913-2சென்னை, பிப்ரவரி 28 – திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் நியூயார்க்கில் உள்ள கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், ”இசையமைப்பதை தவிர வேறு பணிகளிலும் சாதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே எனக்குள் ஆசை இருந்து வருகிறது. இதையடுத்து, தற்போது திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்”.

“எனது முதல் படத்திற்கான பணி தற்போது பிரிட்டிஷ் ‘மியூசிக்கலின் பாம்பே ட்ரீம்ஸ்’-ல் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஆண்ரூவ் லைலாய்டு வெப்பரிடம்,  ‘கதை எழுதும் எண்ணம் உள்ளதா?’ என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர், சொந்தமாக கதையெழுதும் எண்ணம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்”.

#TamilSchoolmychoice

“அதன்பிறகு ஏன் நானே கதையெழுதக் கூடாது என்று தோன்றியது. இதைத்தொடர்ந்து, பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து வரும் மனிதர்களைப் பார்த்தபோது எனக்கு கதை எழுதும் ஆர்வமும் அதிகரித்தது” என்றார் ஏ.ஆர்.ரகுமான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு முறை அகாடமி விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.