Home உலகம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்று பாகிஸ்தான் பயணம்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்று பாகிஸ்தான் பயணம்!

564
0
SHARE
Ad

Amb_of_India_Dr_S_Jaishankarலாகூர், மார்ச் 3 – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் செல்லவிருக்கிறார். நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த இரு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை முன்வைத்து அவரின் இந்த பயணம் தொடங்க இருக்கிறது.

மோடி கடந்த ஆண்டு பிரதமர் பதவி ஏற்றபின் நடைபெற இருந்த இந்தியா, பாகிஸ்தான் செயலர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற இருப்பதால், இதில் பாகிஸ்தானின் நிலைபாடுகள் குறித்து அந்நாட்டு பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு தூதர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“பாகிஸ்தானின் வெளிநாட்டு கொள்கையில் தேசிய பாதுகாப்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எனினும் இந்தியாவுடன் இராணுவ ரீதியான போட்டிக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை”.

“கடந்த ஆண்டே நடைபெற வேண்டிய வெளியுறவுச் செயலர்களின் பேச்சுவார்த்தையில் இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது. எனினும், தற்போது அதனை மீண்டும் தொடங்க இருப்பதால் இரு நாடுகளின் எல்லையில் நிலவும் பதற்றம் வெகுவாக குறையும்” என்று கூறியுள்ளார்.