Home நாடு பினாங்கில் பட்டப்பகலில் வங்கிப் பணம் 500,000 கொள்ளை!

பினாங்கில் பட்டப்பகலில் வங்கிப் பணம் 500,000 கொள்ளை!

505
0
SHARE
Ad

Crime-Pixஜார்ஜ் டவுன், மார்ச் 4 – பாயான் பாருவிலுள்ள வங்கி ஒன்றில் இருந்து பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்ட 500,000 ரிங்கிட்டை (அரை மில்லியன்) ஆயுதங்களுடன் மோட்டாரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.

இன்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்கியிருந்து பணத்தை பாதுகாப்பு வாகனத்தில் ஏற்ற முயன்ற போது பல முறை துப்பாக்கியால் சுட்ட அவ்விருவரும், அதிகாரிகளை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தின் போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திருப்பிச் சுட்டதில் கொள்ளையர்களில் ஒருவனுக்கு காயம்பட்டதாக அம்மாநில குற்றப்புலனாய்வு தலைவர் டத்தோ மஸ்லான் கேசா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice