Home நாடு மஇகா-வில் பிரச்சனைகளை பேசி தீர்க்கும் காலம் கடந்துவிட்டது – சுப்ரா

மஇகா-வில் பிரச்சனைகளை பேசி தீர்க்கும் காலம் கடந்துவிட்டது – சுப்ரா

606
0
SHARE
Ad

subra-health-dentists-1கோலாலம்பூர், மார்ச் 5 – மஇகா பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான கால கடந்துவிட்டது இனி மறுதேர்தல் மட்டுமே சரியான தீர்வு என்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்காத கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலின் செயலால், அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் ஒரே கட்சியான மஇகாவிற்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது கட்சியில் தற்போது நடைபெற்று வரும் அதிகாரப் போராட்டத்திற்காக அல்ல என்றும், இந்த பிரச்சனைகளால் கட்சிக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேர்தலை நடத்த 2009 மத்திய செயலவை உறுப்பினர்களில் இருந்து அமைக்கப்படும் தேர்தல் குழு, மறுதேர்தலை சிறப்பாக நடத்தும் என்றும் சுப்ரா கூறியுள்ளதாக ‘தி ராயா போஸ்ட்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.